அன்புச்செழியனுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது : சசிகுமார் எதிர்ப்பு

share on:
Classic

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு முன்ஜாமின் வழங்க நடிகர் சசிகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சசிகுமாரின்  உறவினர் அசோக் குமார் கடந்த நவம்பர் 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என நடிகர் சசிகுமார் போலீசில் புகார் அளித்தார். 

இந்த புகாரின்  அடிப்படையில் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி உள்ள அன்புச்செழியனை தேடி வருகின்றனர். 

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புச் செழியன் சார்பில்  முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கும், அசோக்குமாருக்கும் இடையில் எந்தவித  
பண பரிவர்த்தனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் போதை மருந்து பழக்கத்திற்கு உள்ளானவர் என்றும், கடன் தொகையை திரும்ப அளிக்காமல் தற்காத்துக் கொள்ளவே இந்த புகாரை சசிக்குமார் அளித்துள்ளதாக அன்புச்செழியன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் எனவே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்புசெழியனுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என நடிகர் சசிகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார்.
 

News Point One: 
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது
News Point Two: 
நடிகர் சசிகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
News Point Three: 
இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது
News Counter: 
90
Loading...

Sathya