close
முகப்பு சனி கோவில் சிறப்பு பூஜையில் பன்னீர்செல்வம்

 சனி கோவில் சிறப்பு பூஜையில் பன்னீர்செல்வம்

August 13, 2017 207Views
 சனி கோவில் சிறப்பு பூஜையில் பன்னீர்செல்வம்

அதிமுக கட்சியின் பல பரப்பரபுகளுக்கு இடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை ஈடுப்படுள்ளார்.

நேற்று முன் தினம் பிரதமரை சந்திபதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் வழங்கப்படாததால் டெல்லியில் இருந்து ஷீரடி சென்றார் என தகவல்கள்  கிடைத்தன. 

இந்நிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் நெவாசா தாலுக்காவில் அமைந்திருக்கும் ஷனி ஷிங்கநபூரில் உள்ள சனி பகவான் கோவிலில் சிறப்பு பூஜையில் ஈடுப்பட்டுள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஷனி ஷிங்கநபூர் கிராமத்தில் இருக்கும் கோவில் சனி கிரகத்துடன் தொடர்புடைய கடவுளான சனியின் பிரபலமான கோயில் என்பது குறிப்பிடதக்கது.