சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் செரினா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடம்

share on:
Classic

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க புயல் செரினா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனமானது வாரம் தோறும் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின் படி 2வது இடத்தில் இருந்த அமெரிக்க புயல் செரினா வில்லியம்ஸ், மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 இது குறித்து செரினா கூறும்போது, தாயாக போகும் நேரத்தில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 2வது இடத்திலும், செக்குடியரசின் பிளிஸ்கோவா 3வது இடத்திலும் உள்ளனர்.

Loading...

sankaravadivu