சீனாவில் இன்று தொடங்கியது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

share on:
Classic

சீனாவில் இன்று தொடங்கியது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். 

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியானது சீனாவில் இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் கண்ணாசாம்பியன் பட்டம் வென்றார். 52 ஆண்டுகளாக இந்திய வீரர்கள் யாரும் பட்டத்தை வெல்லவில்லை ஆகவே, இந்த ஏக்கத்தை தீர்த்து இந்த ஆண்டாவது சாம்பியன் பட்டம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Loading...

Sathya