close
முகப்பு டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு 

 டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு 

August 08, 2017 181Views
 டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு 

எடப்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவன் செல்வராஜ் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே  நாச்சியூர் பனங்காட்டைச் சேர்ந்த ராசு என்பவரின்  மகன்  செல்வராஜ்  அரசு நடுநிலைப் பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இவனை பரிசோதித்த மருத்துவர்,  டெங்கு அறிகுறி  இருப்பதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்  அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில்,  இன்று காலை சிறுவன்  செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும், டெங்கு காய்ச்சல் மக்களுக்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.