close
முகப்பு தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும்

 தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும்

November 02, 2017 226Views
 தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்றார். 

மேலும் அடுத்த 2 தினங்களில் தென் தமிழகம், வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் என்றும், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.