நடுவரின் முடிவை எதிர்த்ததால் ரோகித் ஷர்மாவிற்கு அபராதம்

share on:
Classic

நடுவரின் முடிவை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் தொகை அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், புனே அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற 28வது லீக் போட்டியில், 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது. அப்போது, புனே வீரர் ஜெய்தேவ் உனத்காட் வீசிய பந்து 'வைட்' (Wide) எனக் கூறிய ரோகித் ஷர்மா, கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் ஷர்மாவின் இந்த செயல், ஐபிஎல் ஒழுங்கு விதிமுறை 2.1.5-ஐ மீறிய செயலாகும்.

இதையடுத்து, ரோகித் ஷர்மாவிற்கான நேற்றைய போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து, ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொல்கத்தா அணிக்கெதிராக நடைபெற்ற லீக் போட்டியின்போது நடுவரின் முடிவிற்கு உடன்படாமல் செயல்பட்டதால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Loading...

sankaravadivu