மாநகராட்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு மாநகராட்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை 

 மாநகராட்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை 

November 29, 2017 193Views
 மாநகராட்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை 

 

சென்னை அடுத்த பாடி ஜெகதாம்பிகை நகரை சேர்ந்தவர் சாந்தி.  இவர் சென்னை மாநகராட்சியில் மின்சார பிரிவில் பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில்,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 40 சவரன் நகையை கொள்ளையடுத்து சென்றுள்ளனர். 

வீட்டிற்கு வந்த சாந்தியின் மகள், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில்,  கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.