'ஃபார்முலா ஒன்' கார் பந்தய சாம்பியன் நீகோ ராஸ்பெர்க் ஓய்வு அறிவிப்பு

share on:
Classic

2016ஆம் ஆண்டின் 'ஃபார்முலா ஒன்' கார் பந்தய சாம்பியன் நீகோ ராஸ்பெர்க் (Nico Rosberg) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 31 வயதான மெர்சிடஸ் அணி வீரர் நீகோ ராஸ்பெர்க் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற இந்தாண்டிற்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை முதன்முறையாக வென்று அசத்தினார்.

இந்நிலையில், இந்த பட்டம் வென்ற நான்கு நாட்கள் கழித்து தற்போது திடீரென, சர்வதேச எஃப் ஒன் அரங்கிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஸ்பெர்க், எஃப் ஒன் சாம்பியனாக வேண்டுமென்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாகவும், தனது இலக்கி எனும் மலை மீது ஏறி தற்போது உச்சியில் இருப்பதால் ஓய்வு குறித்த முடிவை அறிவிப்பது இதுவே சரியான தருணமாக இருக்கும் என எண்ணுவதாகவும் அவர் கூறினார்.

Loading...

surya