ஃபாஸ்ட்-8 ஹாலிவுட் படத்தின் ரசிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடிதம்

share on:
Classic

படப்பிடிப்பின்போது தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் திரைப்படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து 'ஃபாஸ்ட் அண்டு ஃபியூரியஸ்-8' திரைப்படத்தின் நடிகர்கள் கடிதம் மூலம் நன்றி தெரிவித்தனர்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போதான கொண்டாட்ட புகைப்படங்களுடன் நன்றி தெரிவிக்கும் கடிதத்தை பதிவேற்றம் செய்துள்ளனர்.

கியூபாவில் தொடங்கிய எங்கள் பயணம் ஐஸ்லாந்து, நியூயார்க் மற்றும் அட்லாண்டா என பல்வேறு பகுதிகளில் கடந்த 100 நாட்களாக நடைபெற்றதாகவும், படப்பிடிப்பின்போது எங்களுக்கு ஒத்துழைப்பு தந்த ரசிகர்கள் மற்றும் திரைப்படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வின் டீசல், வெயின் ஜான்ஸன், ரோட்ரிக்ஸ் மற்றும் கர்ட் ரஸல் உட்பட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'இத்தாலியன் ஜாப்' வெற்றிப்படத்தின் இயக்குனர் கேரி கிரே-வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த 'ஃபாஸ்ட்-8' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Loading...

surya