அகதிகள் திட்டத்திற்கு டோனல்ட் டிரம்ப் தடை

share on:
Classic

அமெரிக்க அகதிகள் திட்டத்தின் செயல்பாடுகளை அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் அகதிகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அகதிகள் திட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவரும் வகையிலான நிறைவேற்று ஆணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளார்.

இந்த தடையால், அடுத்த 4 மாதங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த எந்தவொரு அகதியும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியா, ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் போன்ற இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவினுள் நுழைய அகதிகளுக்கு 3 மாதங்கள் தடை விதித்து ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனிடையே, முஸ்லீம் நாடுகளிலிருந்து அமெரிக்காவினுள் நுழைய முற்படும் கிறிஸ்தவ அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Loading...

jagadish