அடுத்த முறை 2.10மீ தூரம் தாண்டி பதக்கம் வெல்வேன்: மாரியப்பன்

share on:
Classic

உயரம் தாண்டுதல் போட்டியில் அடுத்த முறை 2.10 மீட்டர் தூரம் தாண்டி பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயிற்சி மேற்கொண்டு வருவதாக மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியப்பன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பாராலிம்பிக்கில் 1.89 மீட்டர் தாண்டி பதக்கம் வென்றது போல அடுத்த முறை 2.10 மீட்டர் தாண்டி சாதனை படைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Loading...

surya