அணு உலையில் வெடிவிபத்தால் பரபரப்பு

share on:
Classic

பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள பிலேமன்வில் அணு உலையில் எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து பேசிய மூத்த அதிகாரிகள் அணுமின் நிலைய வெடிவிபத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும் , இந்த சம்பவம் வெடிவிபத்தே தவிர, அணு விபத்து அல்ல என்றும் தெரிவித்தனர்.

மேலும், அணு உலையில் நிகழ்ந்த இந்த வெடி விபத்தினால் கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த விதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள, பழைமை வாய்ந்த அணு ஆலைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆலையின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

Loading...

jagadish