அதிபர் ஒபாமா இறுதி உரை

share on:
Classic

பயங்கரவாதம் மற்றும் இனவாதம் இன்னமும் அமெரிக்க எதிர் கொள்ள வேண்டிய சாவால்களாக உள்ளதாக அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையில் கூறியுள்ளார்.

பாரக் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது, அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் இன்று தனது இறுதி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் மக்கள் தன்னை ஒரு சிறந்த மனிதராக மாற்றிவிட்டதாக கூறினார். தான் அதிபாராக பொறுப்பேற்றப்பிறகு அமெரிக்கா வலிமையானதாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.

மேலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் மேலும் அமெரிக்காவில் இன்னும் 10 நாட்களுக்கு ஜனநாயகம் இருக்கும் என்றும் ஒபாமா குறிப்பிட்டார். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.

மக்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக உள்ளது என்றும் தெரிவித்தார் .

அதிபர் ஒபாமா அதிபராக சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் கண்கலங்கி பேசியபோது அவரது மனைவியும் மற்றும் ஆதரவாளர்கள் கண்கலங்கினர் ,

Loading...

jagadish