அதிபர் பதவியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார் ஒபாமா

share on:
Classic

தமது பதவி காலத்தில் அனைத்து துறைகளிலும் முழு ஒத்துழைப்பை அளித்தமைக்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஒபாமா, பாதுகாப்பு, விமான போக்குவரத்து, அணுசக்தி மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான பிணைப்பை மேம்படுத்தியமை உள்ளிட்டவற்றில் அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றியதை நினைவுகூர்ந்தார். மேலும், இந்தியாவின் 68வது குடியரசு தின விழாவிற்காகவும் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், ஒரு அதிபராக ஒபாமா கடைசியாக மோடியிடம் பேசியுள்ளார். இதுவரை 8 முறை மோடியும் ஒபாமாவும் சந்தித்துள்ள நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் ஒபாமா கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒவ்வொரு செய்தியாளரும் தாய் நாட்டிற்காக போராட வேண்டும், உழைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமா தமது பதவியில் இருக்கும்போது செய்தியாளர்களை இறுதியாக சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தாம் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது அவர்களுடன் மகிழ்ச்சியாகவே நடந்துகொண்டதாக குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு செய்தியாளரும் தாய் நாட்டிற்காக போராட வேண்டும் எனவும், கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Loading...

surya