அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல்

share on:
Classic

உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. அவற்றில், சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், மதுரை மாநகராட்சியில் 100 என, மொத்தம் 919 வார்கள் தமிழகத்தில் உள்ளன.

இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அதிமுக நேற்று வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிமுதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், அதிமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், பிற கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

suresh