close
முகப்புஅனைவரும் அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கி உதவுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

அனைவரும் அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கி உதவுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

December 06, 2017 180Views
அனைவரும் அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கி உதவுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

நாளை நாடு முழுவதும் கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அனைவரும் அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கி உதவுமாறு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நமது நாட்டின் முப்படை வீரர்களின் வீரத்தையும் சேவையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாளை கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், கொடிநாள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், நாட்டின் சேவைக்காக ஆண் மற்றும் பெண்களை ராணுவத்திற்கு அனுப்பி வைக்கும் உன்னத பண்பை தமிழகம் கொண்டுள்ளதாகவும், ராணுவத்தில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்,அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீர மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக அதிக தொகையை நன்கொடையாக வழங்குவதில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டார். 

மேலும், நாளை அனுசரிக்கப்படவுள்ள கொடிநாள் தினத்தன்று நாம் அனைவரும் அதிக அளவில் நிதி வழங்கி, முன்னாள் படை வீரர்களின் நலனை காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.