அன்புச்செழியன் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

share on:
Classic

பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புச்செழியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்புச்செழியன் மீதான புகார்களை விசாரிக்க இடைக்கால தடை விதித்தார்.

மேலும், மத்திய குற்றப்பிரிவு மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் ஜனவரி 29 ம் தேதி பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.

இவர்களை தொடர்ந்து நடிகர் சசிகுமார் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 21 க்கு ஒத்திவைத்தார்.
 

News Point One: 
அன்புச்செழியன் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை
News Point Two: 
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
News Point Three: 
வழக்கு விசாரணையை ஜனவரி 21 க்கு ஒத்திவைப்பு
News Counter: 
120
Loading...

Sathya