அமெரிக்க விமான நிலையத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார் நடிகர் ஷாருக்கான்

share on:
Classic

அமெரிக்க விமான நிலையத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீண்டும் குடியேற்றத் துறை விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில், பாதுகாப்பு முறைகளை நான் முழுமையாக புரிந்துக்கொள்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்க குடியேற்றத் துறை தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபடுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

சாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. 2012ம் ஆண்டு நியூயார்க் விமான நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்க சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஷாருக்கானிடம் மன்னிப்பு தெரிவித்து அவரை விடுவித்தனர்.

அதேபோல் 2009ம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏனெனில் அவரது பெயர் கணினி எச்சரிக்கை பட்டியலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya