close
முகப்புஅரசியல் கட்சிகளுக்கு நிதி செலுத்த புதிய முறை : அருண் ஜெட்லி அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு நிதி செலுத்த புதிய முறை : அருண் ஜெட்லி அறிவிப்பு

January 03, 2018 156Views
அரசியல் கட்சிகளுக்கு நிதி செலுத்த புதிய முறை : அருண் ஜெட்லி அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்கள் இனி ‘தேர்தல் நிதி பத்திரங்கள்’ மூலம் மட்டுமே வழங்க முடியும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரங்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, ‘தேர்தல் நிதி பத்திரங்கள்’ என்ற புதிய பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் உட்பட தனிநபர்கள், எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பெறப்படும் தேர்தல் நிதி பத்திரங்களை  பூர்த்தி செய்து, வங்கிகளின் மூலம் மட்டுமே நன்கொடை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 10 நாட்களுக்கு மட்டுமே பத்திரங்கள் கிடைக்கும் என்றும், பொதுதேர்தல் நடபெறும் ஆண்டில் மாதத்தின் 30 நாட்களிலும் பத்திரம் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும், வங்கியில் இருந்து பத்திரம் வாங்கிய தேதியில் இருந்து, 15 நாட்கள் மட்டுமே பத்திரம் செல்லுபடியாகும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.