close
முகப்புஅரசு செலவில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டக்கூடாது : ஸ்டாலின்

அரசு செலவில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டக்கூடாது : ஸ்டாலின்

January 09, 2018 178Views
அரசு செலவில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டக்கூடாது : ஸ்டாலின்

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஆளுநரைப் பற்றியே பேசக்கூடாது என்று அன்பழகன் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியார்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை பேச அனுமதிக்காமல் அதிமுகவினர் குறுக்கிட்டதாக தெரிவித்தார்.
 
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரும் சசிகலாப் போன்று சிறையில் இருந்து இருப்பார் எனவும் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டக்கூடாது என்றும் குற்றம்சாட்டினார்.

ஆய்வாளர் பெரிய பாண்டியன் மரணம் தொடர்பாக முதல்வர் கூறிய விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் சுட்டதாக கூறப்படும் முனிசேகரே மன்னிப்பு கேட்ட நிலையில், பெரிய பாண்டியன் சுடப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறும் முதல்வரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளதாகத் தெரிவித்தார்.