அரவக்குறிச்சியில் மறு வாக்கு எண்ணிக்கை - தமிழிசை கோரிக்கை

share on:
Classic

அரவக்குறிச்சி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பாஜக வேட்பாளர் இல்லாமல்  வாக்கு எண்ணிக்கை நடத்தியது தவறு. வேட்பாளர் வந்த பின்னர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

இந்த முறை பணப்பட்டுவாடா தடுக்கப்படவில்லை. தேமுதிக வேட்பாளருக்கும் வாக்குகள் எண்ணுமிடத்தில் இடம் ஒதுக்கப்படவில்லை.

நேர்மையாக தேர்தல் நடைபெற்றிருந்தால் பாஜக இரண்டாவது இடம் பிடித்திருக்கும். இடைத் தேர்தல் என்றால் ஆளும் கட்சி வெற்றிபெறுவது எழுதப்படாத விதி.” என்று தெரிவித்துள்ளார்.

Loading...

vaitheeswaran