அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்ததும் போட்டிக்கு திரும்புவேன்: ஆண்டி முர்ரே | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஅறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்ததும் போட்டிக்கு திரும்புவேன்: ஆண்டி முர்ரே

அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்ததும் போட்டிக்கு திரும்புவேன்: ஆண்டி முர்ரே

அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்ததும் போட்டிக்கு திரும்புவேன்: ஆண்டி முர்ரே

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரரான முர்ரே இடுப்பு பகுதி காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் 6 மாதங்கள் விளையாடாமல் இருந்தார்.  

காயம் குணமடைந்ததையடுத்து கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற காட்சி போட்டியில் ஃபெடரரை வீழ்த்தி முர்ரே வெற்றி பெற்றார். காட்சி போட்டியின் போது காயம் முழுவதும் குணமடையாததை உணர்ந்த முர்ரே, ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள வின்செண்ட் மருத்துவமனையில் முர்ரே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து பேசிய முர்ரே, அறுவை சிகிச்சை குணமடைந்ததும், புல் தரையில் நடைபெறவுள்ள தொடரில் இருந்து பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார். புல்தரையில் நடத்தப்படும் தொடரானது ஜூன் 11ஆம் தேதி ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ளதாக முர்ரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.