அவமதித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும்

share on:
Classic

அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடனடியா இந்தியாவிற்கு திரும்பி இருக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

அமெரிக்க விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் நடிகர் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகளின் இந்த செயலுக்கு தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷாருக்கான் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதற்கு சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் இச்சம்பவம் குறித்து கேள்வியெழுப்பும் விதத்தில் பதிவு வெளியிட்டனர். அதில் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டவுடன் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவர் இந்தியாவிற்கு திரும்பியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்திருக்கும். ஷாருக்கான் அவ்வாறு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், அவர் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்றும், இருப்பினும் அவர் அங்கு நிகழ்சியில் பங்கேற்காமல் மீண்டும் திரும்பியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முன்னர் 2009 மற்றும் 2012ல் அமெரிக்கா சென்ற போதும் ஷாருக்கான் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya