ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில் இந்தியாவின் மன்ப்ரீத் கவுர் சாதனை

share on:
Classic

ஜீன்ஹூவில் நடைபெற்று வரும் ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில் இந்தியாவின் மன்ப்ரீத்  கவுர் தங்கம் வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். 

ஆசிய கிராண்ட்பிரீ  சாம்பியன்ஷிப் தடகள போட்டியானது ஜூன்ஹூவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான  குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

 முன்னதாக, 2015–ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் 17.96 மீட்டர் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அவரது சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற உள்ள  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Loading...

sankaravadivu