ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடங்குகிறது

share on:
Classic

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியானது நாளை சீனாவில் தொடங்குகிறது.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியானது சீனாவில் நாளை தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மற்றும் சாய்னா நேவால், ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டம் வென்றார். 52 ஆண்டுகளாக இந்திய வீரர்கள் யாரும் பட்டத்தை வெல்லவில்லை ஆகவே, இந்த ஆண்டாவது சாம்பியன் பட்டம் வெல்வார்களா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

Loading...

sankaravadivu