ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் தொடரில் இந்தியா வெற்றிபெறும் என பொஞ்சா நம்பிக்கை

share on:
Classic

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் பயிற்சியாளர் சைரஸ் பொஞ்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

19வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி 3வது முறையாக சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 26 தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் மொத்தம் 12 நாடுகள் பங்கேற்க உள்ளனர்.  முதல் முறையாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தனியார் வணிகவளாகமான எக்ஸ்பிரேஸ் அவென்யு வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் இவர்களுடன் சென்னையை சேர்ந்த இளம் வீரர் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

இது குறித்து தேசிய பயிற்சியாளர் சைரஸ் பொஞ்சா கூறும் போது, முதல் முறையாக ஆசிய ஸ்குவாஷ் போட்டியை வணிக வளாகத்தில் (express Avenue mall)நடத்த முடிவு செய்துள்ளோம், இதன் மூலம் ஸ்குவாஷ் போட்டிகள் நேரடியாக ரசிகர்களிடையே சென்றடையும் என கூறினார். இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது எனவும், சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஹாங்காங், மலேசியா அணிகள் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் அணிகளாக இருக்கும் எனவும், யாரையும் லேசாக கருதவில்லை, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் எனவும் பொஞ்சா தெரிவித்துள்ளார்.

Loading...

jagadish