ஆப்கன் பெண்கள் தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஆதரவு

share on:
Classic

ஆஃப்கானிஸ்தானில் பெண்கள், தற்காற்புக் கலை பயிற்சி பெற்று வருவதற்கு உலகின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆஃப்கான் தலைநகர் காபூலில், சீன குங் ஃபூ தற்காற்புக் கலையின் விளையாட்டு வடிவமான வூஷூவை பெண்கள் கற்று வருகின்றனர். இந்த பயிற்சியின்போது, உடலை நெகிழ்த்தல், வளைத்தல் மற்றும் கூரிய வாள்களைக் கொண்ட ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சிக்கு, 20 வயது இளம்பெண்ணான ஸிமா அஸிமி என்பவர் ஆசிரியராக செயல்படுகிறார். இதுகுறித்து பேசிய அஸிமி, வூஷூ கலையால் பெண்களுக்கான தற்காப்பு அதிகரிப்பதாகவும், இதனால் ஆத்மாவும் உடலும் சுறுசுறுப்படைவதாகவும் கூறினார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆஃப்கான் பெண்கள் தற்காப்புக் கலையை விளையாட்டு வடிவில் கற்று வருவது பல நாட்டு பெண்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Loading...

jagadish