ஆப்கானிஸ்தான்: தாலிபன் தாக்குதலில் 30 பேர் பலி

share on:
Classic

ஆஃப்கானிஸ்தான் நாடாளுமன்றம் அருகே தாலிபன்களால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நாடாளுமன்றத்தை ஒட்டியுள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் அருகிலும், நூர் மருத்துவமனை அருகிலும் அடுத்தடுத்து இரு வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலியானதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்கள் கழித்து பேசிய தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர், ஆஃப்கான் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றம் அருகே மேலுமொரு கார், வெடிகுண்டுகள் நிரப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish