close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு மதுசூதனன் கடிதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு மதுசூதனன் கடிதம்

January 10, 2018 154Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு மதுசூதனன் கடிதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முதலமைச்சர் பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன. 

ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் அதிமுக சார்பில் அதுபோன்ற எந்த ஒரு ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சருக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனன் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில், ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் என்றும் அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.