ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்பு

December 02, 2017 354Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கரு.நகராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். 

பாஜக சார்பில் இதற்கு முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் போட்டியிடப் போவது இல்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆர்.கே.இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கரு.நாகராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வௌயாகி உள்ளன.