close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

November 24, 2017 141Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அதனை அடுத்து, அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உருவானது. 

இதனையடுத்து, கடந்த அக்டோபர் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றுள்ளார். 

மேலும், இன்று நடைபெற உள்ள தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.