ஆளும் கட்சி சொல்வதைத் தான் தேர்தல் அதிகாரி செய்வார்: மு.க.ஸ்டாலின் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஆளும் கட்சி சொல்வதைத் தான் தேர்தல் அதிகாரி செய்வார்: மு.க.ஸ்டாலின்

ஆளும் கட்சி சொல்வதைத் தான் தேர்தல் அதிகாரி செய்வார்: மு.க.ஸ்டாலின்

December 06, 2017 173Views
ஆளும் கட்சி சொல்வதைத் தான் தேர்தல் அதிகாரி செய்வார்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் அதிகாரி வேலுச்சாமி ஆளும் கட்சியினர் சொல்வதை தான் செய்வார் எனவும், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியினர் சொல்வதை தான் தேர்தல் அதிகாரி செய்வார் என்பது நிரூபனமாகியுள்ளது.
எனவே, தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும், குதிரைபேர ஆட்சி ஒழிக்க வேண்டும். என தெரிவித்தார்.

மேலும் கடந்த முறை தேர்தலில் 89 கோடி முறைகேடு நடந்தது இதுகுறித்து எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்கவில்லை. எனவே, இந்த தேர்தலாவது நேர்மையாக நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம்  7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மழை அச்சுறுத்தல் இருந்ததால் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.