ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்

share on:
Classic

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், சகவீரர் மேத்யூ வேட்-ஐ விமர்சித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடன் தனக்கு முன்னதாக களம் இறங்குவதால் தன்னால் பின்வரிசையில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அவரது கருத்து இப்போது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

அவரது கருத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பயிற்ச்சியாளர் லீமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதித்துள்ளது. மெலும் இன்று நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Loading...

jagadish