இங்கிலாந்தின் கவுண்ட்டி தொடரில் விளையாட விராத் கோலி விருப்பம்

share on:
Classic

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்ட்டி தொடரில் விளையாட இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு விளையாடப்பட்டுவரும் ரஞ்சிக்கோப்பை தொடரைப் போன்று, இங்கிலாந்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு கவுண்ட்டி கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இந்த தொடரில் உலகின் பல்வேறு தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இந்திய வீரர் கோலியும் இதில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கோலி, தனது ஆட்டத்திறனை மேம்படுத்தவும் உலக கிரிக்கெட்டை புரிந்துகொள்ளவும் இந்த தொடர் உதவும் என்று எண்ணுவதாக தெரிவித்தார். மேலும், கவுண்ட்டி தொடரில் விளையாடுவது குறித்து தற்போது சிந்தித்து வருவதாகவும், அதில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் கூறினார்.

2018ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக கவுண்ட்டி தொடரில் கோலி களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மண்ணில் சிறந்த பேட்ஸ்மேனாவும், ரன் குவிக்கும் இயந்திரமாகவும் விளங்கும் கோலி இங்கிலாந்து மண்ணில் இதுவரை களமிறங்கியுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 13.40 என்ற பேட்டிங் சராசரியை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya