இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிகளுக்கு நிதி : உச்சநீதிமன்றம் அனுமதி

share on:
Classic

இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதவுள்ள அடுத்த 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்காக, 1.33 கோடி ரூபாயை செலவிட, பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளை மேற்கொண்டு நடத்துவதற்காக 1.33 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் , அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக பிசிசிஐ கோரிய தொகையை செலவிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 (T20) போட்டிகளுக்காக தலா 25 லட்ச ரூபாயை செலவிடவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் நாளை மும்பையில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்குவது உறுதியாகி உள்ளது.

Loading...

vaitheeswaran