இந்தியாவின் தலைமை துப்பாக்கி பயிற்சியாளர் உயிரிழந்தார்

share on:
Classic

இந்தியாவின் தலைமை துப்பாக்கி பயிற்சியாளர் சயீத் வாஜித் அலி மாரடைப்பால் உயிரிழந்தார்.

புனேவிலுள்ள சத்திரபதி சிவாஜி விளையாட்டு அரங்கில் 60வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து இந்திய துப்பாக்கி சுடுதல் அணியுடன் தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள அலியும் வந்திருந்தார்.

சுமார் 8 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக முன்னாள் துப்பாக்கி பயிற்சியாளர் பவன் சிங் தெரிவித்தார்.

உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் புனே வந்தடைந்தனர்.

Loading...

surya