இந்தியா-இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட்: சென்னையில் நாளை தொடக்கம்

share on:
Classic

சென்னையில் நாளை தொடங்கவுள்ள 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 4 போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்கவுள்ளது.

இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்க்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து என தொடர்ச்சியாக 5 அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அண்மையில் மும்பையில் நடந்த 4வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 1987ல் இந்திய அணியின், ’தோல்வியை சந்திக்காத தொடர்ச்சியான 17 போட்டிகள்’ என்ற முந்தைய சாதனையை தற்போதைய இளம் இந்திய அணி சமன் செய்தது.

இதனால் சென்னை போட்டியிலும் வெற்றி பெற்று கோலி தலைமையிலான இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது.

Loading...

jagadish