இந்தியா - வங்கதேசம் இணைந்து தயாரிக்கும் ஆவணப்படம்

share on:
Classic

இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து 1971 ஆம் ஆண்டு நடந்த வங்கதேச சுதந்திரப் போர் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

வங்கதேசம் 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இந்த போரில் இந்திய அரசின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபர் ரஹ்மானின் 100வது பிறந்த நாள் 2020 ஆம் ஆண்டு வருகிறது.

இதனைக் கொண்டாடும் விதமாக, 1971 ஆம் ஆண்டு நடந்த போரை மையப்படுத்தி வங்கதேச அரசு திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளது. இந்தியாவும் இந்த திரைப்படத்திற்கான உதவிகளை செய்ய உள்ளது. இன்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கயா நாயுடு மற்றும் வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு ஆகியோரது சந்திப்பு நடந்தது. அப்போது அவரிடம் பேசிய வெங்கையா நாயுடு, 1971 போர் தொடர்பான காட்சிகள் தூர்தர்ஷனிடம் இருப்பதாகவும், ஆவணப்படத்திற்காக அதையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான சினிமா தயாரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையும் இந்த சந்திப்பின் போது நடைபெற்றது.

Loading...

vaitheeswaran