இந்த ஆண்டில் மட்டும் 76 புலிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

share on:
Classic

நாடு முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் 76 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வனவிலங்கு கடத்தல் தடுப்புப் பிரிவும் இணைந்து, நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்து நடத்திய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 2016 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் மின்வேலிகள் அமைத்தல், விஷம் வைத்தல், சாலை விபத்து மற்றும் மனிதர்களின் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களால் 76 புலிகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இவற்றில் குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் அதிக புலிகள் உயிரிழந்திருப்பதும், கர்நாடக மாநிலத்தில் 13 புலிகள் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 69 புலிகள் கொல்லப்பட்டதாக கூறும் கணக்கெடுப்புகள், 2010ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது.

Loading...

surya