close
முகப்புஇன்போசிஸ் தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றுள்ளார்

இன்போசிஸ் தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றுள்ளார்

January 03, 2018 148Views
இன்போசிஸ் தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றுள்ளார்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றார். 

இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை என்.ஆர். நாராயணமூர்த்தி நிறுவினார். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த விகாஸ் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் விலகினார். 

இந்நிலையில் புதிய தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் இன்று பொறுப்பேற்றார். 53 வயதாகும் இவர் கேப் ஜெமினி உள்ளிட்ட முன்னணி நிறுவனத்திலும் உயர் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.