இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு

share on:
Classic

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்துகிறார். அதேபோல் கூட்டத்தொடருக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்றும் மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி மசோதா, எல்லையில் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் மட்டுமல்லாது 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு போன்றவைகள் பெரிய அளவில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து கூட்டத்தொடரின் முதல்நாளில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya