6-வது குற்றவாளியாக பரஸ்மல் லோதாவை கைது செய்தது சி.பி.ஐ

share on:
Classic

வேலூரில் 24 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில் சேகர் ரெட்டி, சினிவாசலு, பிரேம் குமார் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் 6 வது குற்றவாளியாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மல் லோதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

சேகர் ரெட்டி வழக்கில் கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதாவை சென்னை அழைத்து வந்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் ரூ.13 கோடி சிக்கிய வழக்கில் பரஸ்மல் லோதா கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் உள்ள அவரை சென்னை அழைத்து வர அமலாக்கப்பிரிவினர் முடிவு செய்தனர்.

அதன்படி பரஸ்மல் லோதாவை டெல்லி சிறையில் இருந்து சென்னை அழைத்து டிரான்ஸ்பர் பிடிவாரண்ட் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த 3ம் தேதி மனு தாக்கல் செய்தனர். அதில் சேகர் ரெட்டிக்கு பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற தொழிலதிபர் பரஸ்மல் லோதா உதவியதாகவும், எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி, பரஸ்மல் லோதாவை டெல்லி சிறையில் இருந்து சென்னை அழைத்து வர வாரண்ட் பிறப்பித்தார். டிரான்சிட் வாரண்ட் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட பரஸ்மல் லோதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளனர்.

Loading...

surya