இன்று நடைபெறுகிறது விஜேந்தர் சிங்-சேக்கா இடையிலான குத்துச்சண்டை போட்டி

share on:
Classic

உலக குத்துச்சண்டை அரங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜேந்தர் சிங்-சேக்கா இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆசிய-பசிஃபிக் சூப்பர் மிடில் வைட் சாம்பியன் பட்டத்திற்கான இந்த போட்டி டெல்லி தியாகராஜா அரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் விஜேந்தர் சிங், முன்னாள் உலக சாம்பியனான தன்ஸானியாவின் ஃபிரான்ஸிஸ் சேக்காவை சந்திக்கவுள்ளார்.

இதுவரை களமிறங்கியுள்ள 7 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத விஜேந்தர் சிங் இந்த போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது விஜேந்தர் களமிறங்கவுள்ள 8வது தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியாகவும், இந்திய மண்ணில் அவர் களமிறங்கும் இரண்டாவது போட்டியாகவும் அமைந்துள்ளது.

Loading...

surya