சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா

share on:
Classic

முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது பூரண உடல்நலம் பெற்றுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீடு திரும்புவது குறித்து அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

Loading...

vaitheeswaran