இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

share on:
Classic

இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரை சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மேலும் புதிதாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அனைத்து ஏடிஎம்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

vaitheeswaran