close
முகப்புஇன்றைய ‘டூடுல்’ யாருக்காக ?

இன்றைய ‘டூடுல்’ யாருக்காக ?

January 09, 2018 177Views
இன்றைய ‘டூடுல்’ யாருக்காக ?

அமெரிக்க வாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் கொரானாவின் பிறந்த நாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் கூகுள் கொண்டாடி மகிழ்கிறது.

அமெரிக்க வாழ் இந்திய மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் கொரானா. இவர் 1922-ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அப்போதைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முல்தான் மாவட்டத்திற்குட்பட்ட ராய்ப்பூரில் பிறந்தார். 

சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் கொரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற குரானா,  மார்சல் நோரென்பர்க்குடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

இக்கண்டுபிடிப்புக்காக 1968-ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கொரானா, நோரென்பர்க், ஹாலி ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. நோபல் பரிசு தவிர கொரானா மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மரணமடைந்த கொரானாவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.