இரட்டை இலை யாருக்கு? : பழனிசாமி, தினகரன் அணியினர் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்

Classic

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமைகோரி பழனிச்சாமி, தினகரன் அணியினர் எழுத்துப்பூர்வ வாதங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.  

இரட்டை இலை சின்னத்திற்கு உரிமைகோரி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு அணியாவும், சசிகலா தரப்பில் டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். 

இதுகுறித்து இதுவரை 7 கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது. முன்னதாக இரட்டை இலை சின்ன வழக்கில் இனி விசாரணை நடைபெறாது என்றும் வாதங்கள் ஏதேனும் இருப்பின் இரு தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. 

இதனையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தினகரன் தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை இன்று தாக்கல் செய்தனர்.

News Point One: 
இரட்டை இலை யாருக்கு? : இதுவரை 7 கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது
News Point Two: 
பழனிச்சாமி தரப்பில் அமைச்சர் சிவி சண்முகம் வாதத்தை தாக்கல் செய்தார்
News Point Three: 
தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதங்களை தாக்கல் செய்தனர்
News Counter: 
85

Giri