இலங்கையில் காலவரையற்ற உண்ணாவிரதம்

share on:
Classic

இலங்கை இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக வெளியிடுமாறு வலியுறுத்தி, வவுனியாவில், மாயமானோரின் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா முருகன் ஆலயத்தில் பூஜை நடத்திய பின்னர், பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், வவுனியா ஏ9 வீதியிலுள்ள தபாலகத்திற்கு முன்பாக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டத்தின்போது, தமிழர் தாயகத்தில் இலங்கை அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுத குழுக்களால் தமது உறவினர்கள் கடத்திச்செல்லப்பட்டமையை நேரடியாக கண்டதாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படும் வரை, சாகும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

சிறு குற்றங்களில் ஈடுபட்டதால் சிறையில் வாடும் கைதிகளுக்கு, பண்டிகை நாட்களின்போது பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் அரசாங்கம், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யவில்லை எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

Loading...

jagadish