இலங்கை அதிபரின் இறப்பைக் கணித்தவர் கைது

share on:
Classic

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இறப்பை கணித்ததாகக் கூறி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தாக்கியவரான விஜித விஜேமுனி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 26ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனா உயிரிழப்பார் என இலங்கை கடற்படையின் முன்னாள் வீரரான விஜித விஜேமுனி ஆருடம் கூறிய காணொலி இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், இக்காணொலி குறித்து விஜேமுனியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர் நிமல் , காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, அதிபரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டி, குற்றப்புலனாய்வுத் துறையினரால் விஜேமுனி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இலங்கையில் ராணுவ மரியாதையை ஏற்கும் நிகழ்வின்போது, ராஜிவ் காந்தியை விஜேமுனி தனது துப்பாக்கியின் பின் புறத்தால் தாக்கினார்.

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ராஜிவ் காந்தி தப்பியதை அடுத்து, விஜேமுனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு அவர் ஜோதிடராக மாறியது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish